இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (09.09.2025) காலை நடைபெறுகிறது.

நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக, 2022 ஆக., 11ல் பதவியேற்ற ஜக்தீப் தன்கர், 74, உடல் நிலையை காரணம் காட்டி அப்பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து 15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், செப்., 9ம் தேதி காலை 10:00 – மாலை 5:00 மணி வரை நடக்கும் என்றும், அன்றைய தினமே ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என்றும் தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. , தேர்தல் நடத்தும் அதிகாரியாக ராஜ்யசபா பொதுச் செயலர் பி.சி.மோடியை நியமித்தது.

இத்தேர்தலில் ஆளும் தேஜ கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்தவரும் மஹாராஷ்டிரா கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணனும், இண்டி கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

ராஜ்யசபா, லோக்சபா எம்.பி.,க்கள் ஓட்டளித்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வர். வழக்கமாக ஓட்டுகள் என்பதற்கு பதில், ‘எலக்டோரல் கொலேஜ்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். ராஜ்யசபாவில் ஐந்து காலியிடங்களை தவிர்த்து, 12 நியமன எம்.பி.,க்கள் உட்பட, 240 பேர் ஓட்டளிக்க தகுதியுடையவர்கள். இதே போல், லோக்சபாவில் ஒரு காலியிடம் தவிர்த்து, 542 பேர் ஓட்டளிக்க தகுதியுடையவர்கள். தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 782 எலக்டோரல் கொலேஜ் ஓட்டுகள் உள்ளன. வெற்றிக்கு, 392 ஓட்டுகள் தேவை.

மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு, லோக்சபாவில் 293; ராஜ்யசபாவில் 130 எம்.பி.,க்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணிக்கு, லோக்சபாவில் 234; ராஜ்யசபாவில் 79 எம்.பி.,க்கள் உள்ளனர். இதன்படி, பா.ஜ., கூட்டணிக்கு 423 எம்.பி.,க்களின் ஆதரவு இருப்பதால், அக்கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. எனினும், பா.ஜ., கூட்டணிக்கு நெருக்கடி தர, இண்டி கூட்டணி வேட்பாளரை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

விடுபட வேண்டிய போதைகள் ! சினிமா போதையா? மது போதையா ?

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!