குளத்தூர் காவல் நிலையத்தில் தூத்துக்குடி எஸ்.பி. ஆய்வு

குளத்தூர் போலீசாரிடம் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் அறிவுரை வழங்கினார்.

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நேற்று குளத்தூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு, காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை (Kit Inspection) பார்வையிட்டும், அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.

மேலும் அந்த காவல் நிலைய போலீசாரிடம் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவு, புகார் மனு பதிவு செய்ததற்கான வரவேற்பு சீட்டை (Reception Slip) வரவேற்பாளர் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது விளாத்திகுளம் உட்கோட்ட டி.எஸ்.பி. அசோகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Related posts

தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்ற உறுதியேற்போம் – தமிழக முதல்வர்

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள் என்று நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.