ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன் தினம் (ஜூலை 16) ஆபரண தங்கம் கிராம், 13,150 ரூபாய்க்கும், சவரன், 1,05,200 ரூபாய்க்கும் விற்பனையானது .வெள்ளி கிராம், 240 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம் – நேற்று (ஜூலை 17) தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் குறைந்து, 13,100 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் சரிவடைந்து, 1,04,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராம் ஐந்து ரூபாய் குறைந்து, 235 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.35 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்றைய நிலவரம் – இந்நிலையில் இன்று (ஜூலை 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 13,135 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி நிலவரம் – வெள்ளி விலை மாற்றமின்றி இன்று ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.