தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை ரூ. 82,000’ஐ நெருங்குகிறது.!

அண்மைக் காலங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை நோக்கி சென்று வருகிறது. தொடர்ந்து உயருவதும், பின்னர் ஏதோ ஒரு நாளில் மெல்ல குறைவதுமாக தங்கத்தின் விலை இருந்தது. கடந்த இரு தினங்களாக எந்த மாற்றமும் நிகழாமல் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

ஒரு சவரன் ரூ.720 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.10,240 ஆகவும், சவரன் ரூ.81,200 ஆகவும் விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்துள்ளது.இதன்மூலம் ரூ.82 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதேபோல, வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.142க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கம், வெள்ளி விலை மாறி மாறி புதிய உச்சத்தை தொட்டு வருவதால் ஆபரணப் பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

Related posts

மனித வாழ்க்கை – இரண்டாம் நாள்

ஈழப் போர்: நாம் அறியாத உண்மைகளும்-ஆதாரங்களும்!

மனித வாழ்வின் முதல் நாள்