கிராண்ட் சுவிஸ் செஸ்: வைஷாலி 2வது முறையாக பட்டத்தை வென்று வரலாறு படைத்தார்.

கிராண்ட் சுவிஸ் தொடரின் மகளிர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான கிராண்ட் மாஸ்டர் வைஷாலி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 2026 ல் நடக்கும் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

உஸ்பெகிஸ்தானில் ‘கிராண்ட் சுவிஸ்’ செஸ் தொடர் நடந்தது. இதில் ‘டாப்-2’ இடம் பெறும் வீரர், வீராங்கனைகள், 2026ல் நடக்கவுள்ள ‘கேண்டிடேட்ஸ்’ தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.

பெண்கள் பிரிவின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் 24 வயதான செஸ் கிராண்ட் மாஸ்டரான வைஷாலி, சீனாவைச் சேர்ந்த டன் ஜோங்யியை எதிர்கொண்டார். 11 சுற்று முடிவில் 8 புள்ளிகள் பெற்று வைஷாலி சாம்பியன் ஆனார். இதன் மூலம் இந்த பட்டத்தை தொடர்ந்து இரண்டாவது முறை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த கொனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் ஏற்கனவே கேண்டிடேட் செஸ் தொடருக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் 3வது நபராக வைஷாலியும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

Related posts

கொல்கத்தாவுக்கு எதிரான லீக் போட்டியில் விராட் கோலி அடித்த அற்புதமான சதம், பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது.

ரியல் மாட்ரிட்டை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி எல் கிளாசிக்கோ போட்டியில் வெற்றி பெற்று, பார்சிலோனா மற்றுமொரு லா லிகா பட்டத்தைக் கைப்பற்றியது.

2026 ஆம் ஆண்டுக்கான தமிழ் தேசிய மாவீரர்கள் நினைவு கால்பந்துப் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்றது.