சென்னையில் 22 காரட் தங்க நகைகளின் விலை இன்று (செப்டம்பர் 16) புதிய உச்சத்தை எட்டியது, ஒரு சவரன் ரூ. 82,000 ஐ தாண்டியது.

சென்னையில் இன்று (செப் 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.82,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10,280க்கு விற்பனை ஆகிறது.

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 10,220 ரூபாய்க்கும், சவரன், 81,760 ரூபாய்க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக் கிழமை, தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 10,210 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 80 ரூபாய் சரிவடைந்து, 81,680 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (செப் 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.82,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10,280க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.82 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.