மகாவலி கங்கையில் மிதந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது!

மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (16.09.2025) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகள் சிலர் கண்டி – பேராதனை , கன்னொருவ பகுதியில் உள்ள  பாலத்திற்கு அடியில் மகாவலி கங்கையில் சடலம் ஒன்று மிதப்பதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கண்டி – தெல்தொட்ட பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் அரச ஊழியர் ஒருவர் என பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Related posts

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில் கைது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!