Wednesday, April 1, 2026

புலிகளின் கப்பலை அழிக்க இந்தியா உதவியதாக இலங்கை கடற்படையின் முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 comments

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்க இந்திய கடற்படை கொழும்புக்கு நேரடியாக உதவியதாக இலங்கையின் முன்னாள் சிரேஷ்ட கடற்படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு பாதுகாப்பு மண்டலத்தின் தளபதியாகவும், கடற்படையின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளருமாக பணியாற்றிய டி.கே.பி.தசநாயக்க, சமூக ஊடக நேர்காணலில், இதனை குறிப்பிட்டுள்ளார்.

மோதல்களின்போது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 26 கப்பல்கள் இருந்தபோதும், அதில் 12 கப்பல்கள், இந்திய கடற்படையின் உதவியுடன் அழிக்கப்பட்டன என்றும் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00