இந்தியா இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகள் குறித்து கலந்துரையாடல்!

இந்தியா இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகள் குறித்து இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சருடன் – ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்.

இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள இ.தொ.கா பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்கள், இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் மதிப்பிற்குரிய நிர்மலா சீதாராமன் அம்மையார் அவர்களை வெள்ளிக்கிழமை (19) சந்தித்து கலந்துரையாடினார்.

மரியாதை நிமித்தமாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, சகோதர நாடான இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து வழங்கி வரும் உதவிகளுக்கும் உறுதியான ஆதரவிற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் பன்முக ஆதரவுகள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துக்கொண்டார்.

Related posts

இலங்கையின் இன்றைய வானிலை!

இலங்கையில் கணினி குற்றங்கள் தொடர்பாக 198 வெளிநாட்டினர் கைது!

இலங்கையின் அந்நிய செலாவணி மாற்று விகிதங்கள்