சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டியுள்ளது!

சென்னையில் இன்று (செப் 20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 18) ஆபரண தங்கம் கிராம், 10,220 ரூபாய்க்கும், சவரன், 81,760 ரூபாய்க்கும் விற்பனை யானது. நேற்று (செப் 19) தங்கம் விலை கிராமுக்கு, 10 ரூபாய் உயர்ந்து, 10,230 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 80 ரூபாய் அதிகரித்து, 81,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (செப் 20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,290க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.82 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related posts

தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்ற உறுதியேற்போம் – தமிழக முதல்வர்

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள் என்று நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.