Tuesday, March 31, 2026

இலங்கை மின்சார தொழிற்சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

0 comments

மின்சார சபை ஊழியர்களுக்கும், மின்சார சபைத் பிரதானிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது, மின்சார தொழிற்சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

இலங்கை மின்சாரசபைத் தலைமையகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் 25 அமைச்சுக்களின் செயலாளர்களும் மூன்று தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்ற நிலையில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்புக்கு பொறுப்பான பணிப்பாளர் பங்கேற்றிருந்தமையினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார தொழிற்சங்க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் மின்சாரத் தொழிலாளர்களின் சட்டப் படி வேலை செய்யும் போராட்டம் 21 ஆம் திகதி வரை தொடரவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கை குறித்து எதிர்வரும் 24 ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளதாகவும் மின்சார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00