சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. ரூ.83 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன்!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்வை கண்டு வருகிறது. நேற்று முன்தினம் (செப் 20), தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் உயர்ந்து, 10,290 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 480 ரூபாய் அதிகரித்து, 82,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (செப் 21) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.

இந்நிலையில் இன்று (செப் 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.82,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,360க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 நெருங்கியது. தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்ற உறுதியேற்போம் – தமிழக முதல்வர்

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள் என்று நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.