கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலிருந்து 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருள் பொதியுடன் “கிரீன் சேனல்” வழியாக வெளியேற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இன்று (23) காலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் வசிக்கும் 29 வயதுடைய பெண்ணொருவரும், இந்தியாவின் சென்னையில் வசிக்கும் 48 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இந்தப் பொதியை தாய்லாந்து – பெங்கொக்கில் வாங்கி, இந்தியாவின் புது டெல்லிக்கு கொண்டுசென்று, அங்கிருந்து இன்று காலை 6.50 மணிக்கு ஏர் இந்தியா விமானம் AI-277 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
- ஞாயிற்றுக்கிழமை ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்
- பலோசிஸ்தானில் ஒரே நாளில் பல்வேறு துப்பாக்கி–குண்டு தாக்குதல்கள்: பாகிஸ்தான் அதிர்ச்சி நிலையில்
- ஈழப் போர்: நாம் அறியாத உண்மைகளும்-ஆதாரங்களும்!
- 2026ஆம் ஆண்டு கொழும்பு தாமரை கோபுரத்தில் பங்கி ஜம்பிங் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
- தசாப்தக் காத்திருப்பா? அல்லது திசைமாறும் அரசியல் வியூகமா?
- இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவரும் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை
அவர்களிடமிருந்து 5 பொதிகளில் 5 கிலோகிராம் 92 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.