தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களிலும், அக்டோபர் 8ம் தேதி 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
இன்று (அக்டோபர் 05) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: * நீலகிரி * கோவை * திண்டுக்கல் * தேனி * மதுரை * சிவகங்கை * விருதுநகர் * தென்காசி * திருநெல்வேலி * கன்னியாகுமரி
நாளை (அக்டோபர் 06) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: * திருவண்ணா மலை * கள்ளக்குறிச்சி * விழுப்புரம் * கடலூர்
அக் 8ம் தேதி, கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: * செங்கல்பட்டு * விழுப்புரம் * திருவண்ணாமலை * கள்ளக்குறிச்சி * தர்மபுரி * சேலம் * திருச்சி * திண்டுக்கல் * மதுரை * தேனி * நீலகிரி * கோவை – இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.