Wednesday, April 1, 2026

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலிருந்து இங்கிலாந்தின் பர்மிங்காம் நகருக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில், நடுவில் தொழில்நுட்பக் கோளாறு.

0 comments

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து பிரிட்டன் பர்மிங்காம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலிருந்து பிரிட்டன் பர்மிங்காமுக்கு ஏர் இந்தியா போயிங் 787-8 விமானம் புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

பின்னர் ரேம் ஏர் டர்பைன் (RAT) பயன்படுத்தி விமானம் பர்மிங்காம் விமானநிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதனால் பர்மிங்காமில் இருந்து டில்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை விமான நிறுவனம் செய்தது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00