சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்து, கிராமுக்கு ரூ.11,000ஐத் தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சென்னையில் இன்று (அக்., 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,480க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,060க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் மிக அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நம் நாட்டிலும் அதன் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் கடந்த சனிக்கிழமை, தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 10,950 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 87,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (அக்., 06) தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,480க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,060க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் விலை ரூ.11 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டு உள்ளது. வரலாறு காணாத தங்கம் விலை உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.