ராகம, படுவத்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 09 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சபுகஸ்கந்தவில் உள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த சாரணர்கள் குழு படுவத்த மத்திய கல்லூரியில் நடைபெற்ற ஜம்போரியில் பங்கேற்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் வீதியை விட்டு விலகி வேக கட்டுப்பாட்டு தடுப்பில் மோதி கவிழ்ந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், பஸ்ஸின் பிரேக்கிங் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து நடந்த நேரத்தில், பஸ்ஸில் 20 சிறுவர்கள் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கையின் இன்றைய வானிலை!

இலங்கையில் கணினி குற்றங்கள் தொடர்பாக 198 வெளிநாட்டினர் கைது!

இலங்கையின் அந்நிய செலாவணி மாற்று விகிதங்கள்