Wednesday, April 1, 2026

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, சுமார் 15 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

0 comments

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் ஜெனரல் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இராஜாங்கனை, சியம்பலங்கமுவ, தெதுரு ஓயா நீர்த்தேக்கம், பதலகொட, ஹத்வதுன்ஓயா மற்றும் யோதவாவி நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் எனவும், அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00