Friday, April 3, 2026

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 29,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0 comments

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் நாடளாவிய ரீதியில் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சீரற்ற வானிலையால் 7,395 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 29,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தொடர்ச்சியான மழை வீழ்ச்சியினால்  11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) சிரேஸ்ட ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதீர அறிவித்துள்ளார்.

அத்துடன், இதுவரை பெய்த பலத்த மழையின் விளைவாக நில்வளவை கங்கை, ஜின் கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர் மட்டத்தில் இருப்பதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00