கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வரும் 16 வரை லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை (நவ.,12) கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்ற உறுதியேற்போம் – தமிழக முதல்வர்

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள் என்று நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.