இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13.11.2025) இரவு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியைச் சேர்ந்த குறித்த நபர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டுமானப் பணிகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த மரணம் குறித்து இஸ்ரேல் பொலிஸின் இன்டர்போல் கிளை தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர் இலங்கை அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு முகவரகத்தினூடாக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மனித வாழ்க்கை – ஐந்தாம் நாள்

கரும்புலிகள் நாள் 2026 பெல்சியம்

ILC தமிழ் அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலி மக்கள் வானொலி வழங்கும் இன்னிசைக் குரல் பாடல் போட்டி 2026