களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப்பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான 350 கிராம் தங்க நகைகள் காணமல் போன சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (21.11.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற  பதில் பதிவாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளதோடு,   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில் கைது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!