சென்னையில் இன்று (29-11-2025) 22 காரட் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.1120 அதிகரித்து விற்கப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (நவ.,27) ஆபரண தங்கம், கிராம் 11,770 ரூபாய்க்கும், சவரன், 94,160 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 180 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று (நவ.,28) தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 11,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 94,720 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு மூன்று ரூபாய் உயர்ந்து, 183 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (நவ.,29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1120 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.95,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,980க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.192க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related posts

தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்ற உறுதியேற்போம் – தமிழக முதல்வர்

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள் என்று நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.