திருகோணமலையில் ஆற்றின் கரை இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 55 பேர் விமானம் மூலம் மீட்கப்பட்டனர்.

திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பையடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமாபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 55 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (30) இதுவரை விமான மூலம் மீட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த இடை முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வெள்ளத்தில் இருந்து விமானம் ஊடாக மீட்கப்பட்டவர்களை சீனாபே விமான படைதளத்திற்கும் சேருவல மகாவலி விளையாட்டு மைதானத்திற்கும் கொண்டுவரப்பட்டனர்.

இதேவேளை மேலும் 22 பேர் விமான மூலம் மீட்கப்பட்டு வருகின்றதுடன் கடல் மற்றும் விமான மூலம் தொடர்ந்து மீட்கும் பணி இடம்பெற்றுவருகின்றதாக தெரிவித்தனர்.

Related posts

இன்னும் காலம் கடந்துவிடவில்லை – சமூகங்களைப் பாதுகாத்து வலுப்படுத்தும் ஒரு சட்டத்தை நம்மால் உருவாக்க முடியும்.

முடங்கியது முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நிரம்பியது ஆறுதல் சொல்லக்கூட வார்த்தைகள் இல்லை

தமிழினப்படுகொலை நினைவுநாள் முள்ளிவாய்க்கால் 2026