Wednesday, April 1, 2026

கற்பிட்டி கடற்கரையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

0 comments

கற்பிட்டி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகொன்றிலிருந்து 63 கிலோகிராம் 718 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 14 கிலோகிராம் 802 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (05-12-2025) இரவு கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த போதைப்பொருள் தொகை மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தொகையை கொண்டு சென்ற படகின் உரிமையாளர் கற்பிட்டியைச் சேர்ந்தவர் என்றும், அவரைக் கைதுசெய்ய பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00