இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காக “ஆதரய” எனும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இத்திட்டம் பாடசாலை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டது.

இந்த திட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாளை திங்கட்கிழமை (08-12-2025) ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

கொட்டகலை சி.எஃப்.எல். இடம்பெறும் இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் கருப்பையா ராமகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டு கல்வி நடவடிக்கைக்கான பொருட்களை நன்கொடையாக வழங்கவுள்ளனர்.

குறித்த பகுதியில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் இருந்தால் ஏனையவர்கள் தெரியப்படுத்தி, இந்தத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில் கைது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!