திருகோணமலை, குச்சவளி காவல் பிரிவுக்கு உட்பட்ட சலப்பையாறு பகுதியில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திருகோணமலை,குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சலப்பையாறு பகுதியின் திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியோரத்தில் இருந்து  இன்று வெள்ளிக்கிழமை (12-12-2025) காலை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 56 வயதுடைய பெண் ஆவார். 

இவர் வியாழக்கிழமை (11-12-2025) இரவு அயலில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக தனது வீட்டவர்களிடம் கூறி விட்டு வெளியே சென்றதாக அவரது பிள்ளைகள் கூறியுள்ளனர்.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. எனினும் இது ஒரு விபத்தாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.