ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கையில் உள்ள தூதரகம் ஏற்பாடு செய்த ‘நீர் விருதுகள் விழா’.

இலங்கையின் வோட்டர் சம்பியன்களை பாராட்டுவதை முன்னிட்டு, ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கையில் உள்ள தூதரகம் ஏற்பாடு செய்த ‘வோட்டர் எவார்ட்ஸ்’ (Water Awards Ceremony) வழங்கும் விழா புதன்கிழமை (10-12-2025), கொழும்பு கோஃ பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழா, ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கை தூதர் காளித் நாசர் அல் அமேரி தலைமையில் நடைபெற்றது.

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹர்ஷண நாணயக்கார இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் பின்வரும் பிரிவுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

ஆராய்ச்சி (Research)
வெற்றியாளர்: பாலிந்த மதுஷங்க பேரேரா
ஆய்வு தலைப்பு: இலங்கையின் நீர்பாதுகாப்பும் காலநிலைத் தாங்கும் திறனும் — போபத்தலாவா மேக வனப் புதுப்பிப்பு திட்டம்

வலியுறுத்தல் மற்றும் பத்திரிகையியல் (Advocacy & Journalism)
வெற்றியாளர்: மதாவா போட்டேஜு
தலைப்பு:களனி ஆற்றின் நீர் தர மேம்பாட்டுத் திட்டம்

இளைஞர்கள் மற்றும் பாடசாலைகள் (Youth & Schools)
வெற்றியாளர்: டாக்டர் தனுஜா அரியநந்த
தலைப்பு:மழைநீர் சேகரிப்பு தொழில்நுட்பம் வழியாக பாடசாலை மாணவர்களுக்கு காலநிலை மாற்றத்திற்கான ஏற்புத்திறன் பயிற்சி வழங்கல்

சமூகங்கள் (Communities)
வெற்றியாளர்: ஷான் கொரேயா
தலைப்பு: “Let Them Bloom – Give Them Water”
வெற்றியாளர்களுக்கு விருதுகளை, பிரதம விருந்தினரான நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதர் காளித் நாசர் அல் அமேரி ஆகியோர் வழங்கினர்.

இந்த நிகழ்வில் பல்வேறு நாடுகளின் தூதர்கள், சர்வதேச நீர்முகாமைத்துவ நிறுவன (IWMI) பிரதிநிதிகள், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தூதரகப் பணியாளர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Related posts

இலங்கையின் இன்றைய வானிலை!

இலங்கையில் கணினி குற்றங்கள் தொடர்பாக 198 வெளிநாட்டினர் கைது!

இலங்கையின் அந்நிய செலாவணி மாற்று விகிதங்கள்