டில்லி வந்த கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தியாவுக்கு கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். மூன்றாவது நாளாக இன்றைய பயணத்தில், மெஸ்ஸி டில்லிக்கு சென்றார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மெஸ்சிக்கு நிரம்பி வழிந்த அருண் ஜெட்லி மைதானத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மெஸ்சி.. மெஸ்சி.. என்ற ரசிகர்களின் கோஷத்தால் அருண் ஜெட்லி மைதானம் அதிர்ந்தது.

அங்கு அவர் ரசிகர்களை நோக்கி கால்பந்துகளை வீசினார். மெஸ்ஸி ஜெய் ஷாவிடமிருந்து கிரிக்கெட் பேட் மற்றும் இந்திய அணி ஜெர்சியை பரிசாக பெற்றார்.


மைதானத்தில் ரசிகர்களிடம் மெஸ்ஸி பேசுகையில், ‘இந்தியா வந்தது உண்மையிலேயே ஒரு அழகான அனுபவமாக இருந்தது. ரசிகர்கள் கொடுத்த அன்புக்கும், பாசத்துக்கும் மிக்க நன்றி’ என தெரிவித்தார்.

Related posts

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு, சத்தியம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் அவசியம் என பிரிட்டன் வலியுறுத்துகிறது!

சர்வதேசப் பங்கேற்புடன் கூடிய ஒரு பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன!

இன்னும் காலம் கடந்துவிடவில்லை – சமூகங்களைப் பாதுகாத்து வலுப்படுத்தும் ஒரு சட்டத்தை நம்மால் உருவாக்க முடியும்.