அம்மா படிக்க சொன்னதால், யாழ்ப்பாணத்தில் “15 வயது மாணவி” தவறான முடிவை எடுத்து தற்கொலை செய்து கொண்டார்!

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவியின் தாயார் அந்த மாணவியை பாடங்களை படிக்குமாறு தினமும் கூறுவதால் மாணவி மன விரக்தியில் இருந்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதியும் இவ்வாறு தாயார் கூறியதால் குப்பைகளை எரிப்பது போல் பாசாங்கு செய்து பெற்றோலை தன்மீது ஊற்றி தனக்கு தானே தீ பற்ற வைத்துள்ளார்.

இதன்போது அயல்வீட்டில் உள்ளவர்கள் மாணவியை காப்பாற்றியவேளை குறித்த மாணவி அவர்களுக்கு சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

பின்னர் தீக்காயங்களுக்குள்ளான அவரை மந்துவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் 17ஆம் திகதி புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.