அலைவரிசைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்; இலங்கை ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு ஊடக அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஒளிபரப்பு அனுமதிப் பத்திரங்கள் குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவையே ஆகும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அந்த நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அலைவரிசைகளின் அனுமதிப் பத்திரத்தைத் திரும்பப் பெறுவதற்கு அமைச்சருக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

சுகாதார தகவல் பரப்பலுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் 29ஆம் திகதி திங்கட்கிழமை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற உரையின்போதே அமைச்சர் இதனைத் தெளிவுபடுத்தினார்.

மேலும், ஒவ்வொரு தொலைக்காட்சி நிலையத்திற்கும் வழங்கப்படும் ஒளிபரப்பு அனுமதி தற்காலிகமானதுதான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்

.

Related posts

இலங்கையின் இன்றைய வானிலை!

இலங்கையில் கணினி குற்றங்கள் தொடர்பாக 198 வெளிநாட்டினர் கைது!

இலங்கையின் அந்நிய செலாவணி மாற்று விகிதங்கள்