இலங்கையின் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 27ஆம் , 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட  குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கைதாகி இருந்தனர். 

கைதான மீனவர்கள் இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் , புதன்கிழமை (7) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 23 பேரினதும் விளக்கமறியலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் மன்று நீடித்துள்ளது . 

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.