இலங்கையின் தெஹிவளை கடற்கரை சாலையில் துப்பாக்கிச் சூடு – ஹோட்டல் உரிமையாளர் காயம்.

தெஹிவளை மெரின் டிரைவ் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் முன்பாக 09’ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதில் ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார்.

ஹோட்டலுக்கு முன்பாக மது அருந்திக் கொண்டிருந்த இரு நபர்கள், ஹோட்டல் உரிமையாளரை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில் கைது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!