கொழும்பில் மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலிவத்த பிரதேசத்தில் வாள்களுடன் இளைஞன் ஒருவன் மட்டக்குளி பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (09-01-2026) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் ஆவார்.