கட்டுகெந்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று சனிக்கிழமை (10-01-2026) மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 1,620 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கோனவில பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Related posts

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில் கைது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!