இலங்கை காவல்துறைத் தலைவர் கடும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்: நாடு தழுவிய சோதனைகள்; ஒரே நாளில் 596’க்கும் மேற்பட்டோர் கைது!

அதற்கமைய, 30,386 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 18 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 268 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 184 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 467 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 72 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,584 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.