Wednesday, April 1, 2026

இன்றைய வானிலை அறிக்கை

0 comments

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் எனவும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து வட திசையை நோக்கி காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00