முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் இருந்து மூன்று கைக்குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அநுராதபுரம், மாத்தளை சந்தி பகுதியில் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரின் வீட்டில் இருந்து மூன்று கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதனையடுத்து, குறித்த முன்னாள் இராணுவ சிப்பாய் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

Related posts

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில் கைது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!