Wednesday, April 1, 2026

கடலில் கரைந்து விட்ட காலங்களும், வரலாற்றில் தடம் பதித்துவிட்ட நினைவுகளும். – நினைவுகள் பாகம் 1

0 comments

தமிழீழக் கடலோடிகளின் வாழ்வு கத்திமேல் நடப்பதை விடக் கொடியது. அதுவும் தமிழீழத்திற்கு வலுவும் வளமும் சேர்த்துக்கொண்டு, பன்னாட்டுக் கடற்பரப்பில் நடமாடும் வல்லாதிக்க அரக்கர்களின் கைகளுக்குள்ளால் மீண்டு வருதலென்பது கடுந்தவம்.

உணவு உண்ண நேரமின்றி, உறங்க நேரமின்றி புயலோடும் காற்றோடும் மோதியபடியும், எதிரியின் கண்ணுக்கு நாடகமாடியபடியும், அவர்கள் சுமந்துவரும் பொருட்களே மண்மீட்புப் போருக்கு வலுச்சேர்த்தன.

ஒவ்வொரு கப்பலும் சுமந்துதிரிந்த பொருட்களும் கதைகளும் ஓராயிரம். அவை என்றுமே கரைவராத கப்பல்கள். என்றோ ஓர்நாள் தமிழீழம் விடியும்போது கரையேறுவோம் என்ற இலட்சியக்கனவோடு சுழன்று திரிந்த தமிழீழக் கடலோடிகளைச் சுமந்த கப்பல்கள். மண்ணை மீட்பதற்காகத் ஒவ்வொன்றாகத் தலைவன் அணிதிரட்டிய கப்பல்கள்.

கண்ணுக்குத் தெரியாமலே கரைந்துபோன கப்பல்களின் கதைகளாக, மண்மீட்புப் போருக்கு உரமூட்டிய இரத்தநாளங்களின் ஈகவரலாறாக…

தமிழீழக் கடலோடியும், நீண்டகாலத் தலைமை அதிகாரியுமாகிய எஸ்.கே யின் எழுத்தில் நினைவுகள்

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00