தமிழீழப்போரிற்கு உயிரூட்டிய இரத்தநாளங்களின் ஈகவரலாறு. கடவின் மடியில் கடலின்மடியில் குழுமம் வெளியிடும் – நினைவுகள்..

எழுத்து: எஸ்.கே உலகெங்கும் 01.03.2026
தமிழீழக் கடலோடிகளின் வாழ்வு கத்திமேல் நடப்பதை விடக் கொடியது. அதுவும் தமிழீழத்திற்கு வலுவும் வளமும் சேர்த்துக்கொண்டு, பன்னாட்டுக் கடற்பரப்பில் நடமாடும் வல்லாதிக்க அரக்கர்களின் கைகளுக்குள்ளால் மீண்டு வருதலென்பது கடுந்தவம்.
உணவு உண்ண நேரமின்றி, உறங்க நேரமின்றி புயலோடும் காற்றோடும் மோதியபடியும், எதிரியின் கண்ணுக்கு நாடகமாடியபடியும், அவர்கள் சுமந்துவரும் பொருட்களே மண்மீட்புப் போருக்கு வலுச்சேர்த்தன.
ஒவ்வொரு கப்பலும் சுமந்துதிரிந்த பொருட்களும் கதைகளும் ஓராயிரம். அவை என்றுமே கரைவராத கப்பல்கள். என்றோ ஓர்நாள் தமிழீழம் விடியும்போது கரையேறுவோம் என்ற இலட்சியக்கனவோடு சுழன்று திரிந்த தமிழீழக் கடலோடிகளைச் சுமந்த கப்பல்கள். மண்ணை மீட்பதற்காகத் ஒவ்வொன்றாகத் தலைவன் அணிதிரட்டிய கப்பல்கள்.
கண்ணுக்குத் தெரியாமலே கரைந்துபோன கப்பல்களின் கதைகளாக, மண்மீட்புப் போருக்கு உரமூட்டிய இரத்தநாளங்களின் ஈகவரலாறாக…
- ஆயத்துல்லா அலி கமேனியின் படுகொலையில் இந்திய அரசின் மௌனம் நடுநிலையானது அல்ல!
- இலங்கையில் இணையவழி பாலியல் தொழில்துறை வளர்ந்து வருகிறது.
- சிறிலங்கா போலீசாருக்கு நியூசிலாந்து பெண் நன்றி தெரிவித்தார்: தனிப்பட்ட பயணத்தில் ஏற்பட்ட பாலியல் தொல்லைக்கு விரைவான நடவடிக்கை
- 2047க்குள் 400க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள்: இந்தியாவை உலக விமான மையமாக மாற்றும் பசுமை எரிபொருள் இலக்கை பிரதமர் மோடி அறிவிப்பு
- 𝑻𝑯𝑬 𝑭𝑹𝑨𝑪𝑻𝑼𝑹𝑰𝑵𝑮 𝑶𝑹𝑫𝑬𝑹
- தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வியடைந்தார்.
தமிழீழக் கடலோடியும், நீண்டகாலத் தலைமை அதிகாரியுமாகிய எஸ்.கே யின் எழுத்தில் நினைவுகள்