தெருவுக்குச் செல்லும் மழைநீர் வடிகாலில் வீட்டுக் கழிவுநீரை வெளியேற்றிய ஒருவருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை தென் கிழக்கு பிரதேசத்தில் வசிக்கும் குடியிருப்பாளரினால் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை மழைநீர் வழிந்தோடுவதற்காக கட்டப்பட்ட பொது வாய்க்காலினுள் விடப்பட்டுள்ளது.

அதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

அவ்முறைப்பாட்டிற்கு அமைவாக குறித்த நபர் இனங்காணப்பட்டு, அவரிற்கு எதிராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஷ் பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.

குறித்த வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் மன்றினால் 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

Related posts

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வம் காலமானார்.

கெப்பாபுலவில் தங்கள் பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி மக்கள் தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஈழத் தமிழரும், இந்திய வம்சாவளி தமிழரும், ஒன்று சேர்ந்தால்தான் இலங்கை தமிழர்