Wednesday, April 1, 2026

தலைமன்னாரில் 1158 சங்குகளை சட்டவிரோதமாக பிடித்த சந்தேக நபர் கைது!

0 comments

இலங்கை கடற்படை மன்னார் மீன்வள ஆய்வாளருடன் இணைந்து கடந்த 25-01-2026 ஆம் திகதி தலைமன்னார், இருக்கலம்பிட்டி பகுதியில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக 1158 சங்குகளை பிடித்து வைத்திருந்த சந்தேக நபரைகடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

அதன்படி, மன்னார் மீன்வள ஆய்வு அலுவலகத்துடன் இணைந்து வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கஜபா நடத்திய இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள ஒரு சந்தேகத்திற்கிடமான வீட்டை சோதனையிட்டனர்.

அங்கு, வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த, 70மிமீ சுற்றளவு சட்டப்பூர்வ வரம்பை பூர்த்தி செய்யாத சுமார் 1158 சங்குகளுடன் சந்தேக நபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னார், இருக்கலம்பிட்டியைச் சேர்ந்த 65 வயதுடையவர் ஆவார்.

குறித்த சந்தேக நபரும், சங்குகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00