இலங்கையில் முதல் ஸ்மார்ட் பஸ் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தியது.
இலங்கை
இலங்கை, தனது முதலாவது ‘ஸ்மார்ட்’ பேருந்து பயணச்சீட்டு (Smart Bus Ticketing) முறையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியதன் மூலம், பொதுப் போக்குவரத்து துறையின் டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்த புதிய முறையின் மூலம் பயணிகள் தொடுகையற்ற அட்டைகள் (Contactless Cards), டிஜிட்டல் பணப்பைகள் (Digital Wallets) மற்றும் QR குறியீடுகள் மூலம் பயணக் கட்டணங்களை எளிதாகவும் பாதுகாப்பாகவும் செலுத்த முடியும்.
இந்த முன்னேற்றம், ‘ஸ்மார்ட் மோபிலிட்டி’ (Smart Mobility) துறையில் உலகளாவிய முன்னணி நாடுகளின் வரிசையில் இலங்கையையும் இணைக்கிறது.
இலங்கையின் முதலாவது திறந்தநிலை போக்குவரத்து கொடுப்பனவு (Open-Loop Transit Payment) முறைமையின் தொழில்நுட்பம், மென்பொருள், வன்பொருள் மற்றும் செயல்பாட்டு பங்காளிகளாக Ceylon Business Appliances (CBA) மற்றும் Nimbus Ventures செயல்பட்டுள்ளன. இலங்கை அரசு மற்றும் முன்னணி வங்கி பங்காளர்களின் ஒத்துழைப்புடன் இந்த தேசிய முயற்சி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக இலங்கையின் டிஜிட்டல் உருமாற்றப் பயணத்தில் CBA முன்னணியில் இருந்து செயல்பட்டு வருகிறது. நாட்டின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் CBA முக்கிய பங்காற்றியுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த CBA நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான சாரதா பெர்னாண்டோ,
“இது வெறும் பயணச்சீட்டு முறையின் மேம்படுத்தல் மட்டுமல்ல; இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையில் நிகழும் ஒரு முழுமையான டிஜிட்டல் புரட்சியாகும். உலகளாவிய அங்கீகாரம் பெற்ற, பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்துத் தீர்வை நமது மக்களுக்கு வழங்குவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். ஒவ்வொரு Tap மூலமாகவும் வசதி, வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த தொடர்புகளைக் கொண்ட எதிர்காலத்தை உருவாக்குகிறோம்,” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “உலகை வடிவமைத்து வரும் நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக உள்ள, டிஜிட்டல் ரீதியாக அதிகாரமளிக்கப்பட்ட ஒரு இலங்கையை கட்டியெழுப்புவதுதான் எமது நீண்டகால இலக்காகும்,” எனக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த CBA நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான ருவத் பெர்னாண்டோ,
“உலகளாவிய நவீன போக்குவரத்துத் தொழில்நுட்பங்களை இலங்கை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்த முடியும் என்பதை இந்தத் திட்டம் நிரூபிக்கிறது. பாதுகாப்பான, விரிவுபடுத்தக்கூடிய மற்றும் சர்வதேச தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட மென்பொருள் தீர்வுகளை நாட்டிற்கு கொண்டு வருவதே எமது அர்ப்பணிப்பாகும்,”
“அதிநவீன திறந்தநிலை கொடுப்பனவு தளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், தொழில்நுட்ப ரீதியாக வலுவான மற்றும் உலகளாவிய டிஜிட்டல் முன்னேற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயாரான நாடாக இலங்கையை நிலைநிறுத்துவதில் இது ஒரு தீர்மானமிக்க தருணமாகும்,” எனச் சுட்டிக்காட்டினார்.
இந்த முயற்சியில் நம்பிக்கை வைத்து பங்காளிகளாக இணைந்த சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, இலங்கை வங்கி (BOC), மக்கள் வங்கி (People’s Bank) மற்றும் DFCC வங்கி ஆகிய வங்கிகளுக்கு, அவர்களின் புதிய பயணச்சீட்டு செயலியின் வெற்றிகரமான அறிமுகத்திற்காக CBA தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
Nimbus Ventures மற்றும் CBA உருவாக்கிய வலுவான மென்பொருள் தீர்வுடன் இணைந்து, இந்த பயணச்சீட்டு செயலி PAX A910S பயணச்சீட்டு இயந்திரத்துடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் செயல்படுத்துவதற்காக, உயர்ந்த நம்பகத்தன்மை மற்றும் விரிவாக்கத் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய டிஜிட்டல் சாதனையை நனவாக்குவதற்காக அயராது உழைத்த பொறியியல், மென்பொருள் மேம்பாடு, பயனர் அனுபவ வடிவமைப்பு (UX), செயல்பாடுகள் மற்றும் களச் செயல்பாட்டுக் குழுக்களுக்கு CBA தனது விசேட நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஒவ்வொரு Tap பின்னணியிலும் ஒரு புத்தாக்கம் உள்ளது — ஒவ்வொரு பயணத்தின் பின்னணியிலும் CBA நிற்கிறது.
நாம் ஒன்றிணைந்து இன்னும் புத்திசாலியான, சிறந்த தொடர்புகளைக் கொண்ட இலங்கையை உருவாக்குகிறோம்.