காலி சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தகராறு செவ்வாய்க்கிழமை (27-01-2026) இரவு ஏற்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவர்களான “கரந்தெனிய சுத்தா” என்பவரின் சகாக்களுக்கும் “அகமிபொடி அஜித்” என்பவரின் சகாக்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது “கரந்தெனிய சுத்தா” என்பவரின் சகா ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில் கைது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!