“தமிழக வெற்றிக் கழகம்” வெற்றி பெற்றால் இந்தியாவே மாறும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம், த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் இருந்தபோது, விளம்பர தட்டிகளில், கட்சியின் முன்னோடிகளான எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா படங்கள் எங்கு இடம் பெற்று இருந்தன என்பது அனைவருக்கும் தெரியும். இடம்பெறாத நேரங்களில் நான் குரல் கொடுத்ததும், மீண்டும் பழைய இடங்களிலேயே இடம் பெற வைத்தனர். ஆனால், இப்போது என்ன நடக்கிறது?

தே.ஜ., கூட்டணியில் தமிழகத்துக்கு தலைமை வைப்பதாக கூறும் அ.தி.மு.க., கூட்டணி தொடர்பான பேனர், போஸ்டர்களில் எம்.ஜிஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாதது குறித்து எந்த கேள்வியும் எழுப்பவில்லை.

த.வெ.க.,வுக்கு 40 சதவீத ஓட்டுகள் உள்ளன என பல கருத்துக் கணிப்புகளும் கூறுகின்றன. அப்படியென்றால், த.வெ.க., தான் வென்று ஆட்சியை பிடிக்கப் போகிறது என அர்த்தம். கருத்துக் கணிப்புகள் நிஜமாகி, த.வெ.க., வென்றால், இந்தியாவுக்கு ஒரு மாற்றமாக இருக்கும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Related posts

நாம் தமிழர் உறவுகள் இதை செய்யாதீர்கள்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாதது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

கேரளாவின் புதிய முதலமைச்சரின் பெயர் நாளை அறிவிக்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு.