சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் விநியோகம் வரும் 6 ஆம் தேதி தொடங்கும். – தமிழக வெற்றிக் கழகம்

இது தொடர்பாக, அக்கட்சி பொதுச்செயலர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கை:

வரும் சட்டசபை தேர்தலுக்கு, 234 தொகுதிகளிலும், த.வெ.க., சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு கொடுக்கலாம். பனையூர் அலுவலகத்தில், நாளை மறுநாள் முதல் 14ம் தேதி வரை, மனுக்கள் வழங்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

‘நான் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு, எல்லாரும் ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும்’ என, விஜய் அழுத்தமாக சொல்லி வருகிறார். எனவே, வேட்பாளர்களை விஜய் தேர்வு செய்து விட்டதாக தெரிகிறது.

எனினும், அனைத்து கட்சிகளையும் போல், விருப்ப மனு வினியோகத்தை கட்சி தலைமை துவக்குகிறது. ஒவ்வொரு தொகுதியிலும், விஜய் பெயரில், குறைந்தது 50 மனுக்களையாவது வாங்க வேண்டும் என, கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்

Related posts

சிங்கள கைக்கூலி, தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி!

நீதியை நோக்கிய பேரணி – லண்டன்

நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் 41வது ஆண்டு நினைவு நாள் உணர்ச்சிப் பெருக்குடன் அனுசரிக்கப்பட்டது.