சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்து மாலையில் ரூ.1,140 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று (பிப்ரவரி 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் குறைந்தது. மாலையில் ரூ.1,140 உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன. கடந்த 2 தினங்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 04) ஆபரண தங்கம் கிராம், 14,900 ரூபாய்க்கும், சவரன், 1,19,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 320 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று (பிப்ரவரி 05) தங்கம் விலை கிராமுக்கு, 580 ரூபாய் குறைந்து, 14,320 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 4,640 ரூபாய் சரிவடைந்து, 1,14,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் குறைந்து, 300 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 20,000 ரூபாய் சரிவடைந்தது.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாலையில் ஒரு கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 259 ஆக விற்பனை ஆனது. சவரனுக்கு 1,140 ரூபாய் உயர்ந்த ஆபரண தங்கம், சவரனுக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் ஆக விற்பனை ஆகிறது.

வெள்ளியும் சரிவு

வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 20 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related posts

தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்ற உறுதியேற்போம் – தமிழக முதல்வர்

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள் என்று நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.