இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் நேற்று (பிப்ரவரி 07 2026) 51 நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு சரணடைந்தனர்.

நக்சல் பயங்கரவாதத்தை ஒழிக்க இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியை மத்திய அரசு காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது. இதனால் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை வேகமெடுத்து உள்ளது. நக்சலைட்டுகள் பதுங்கி இருக்கும் இடங்களை கண்டறிந்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கையில், நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு நக்சலைட்டுகள் சரணடையும் நிகழ்வுகளும் நடக்கிறது. அமைதி பாதையில் திரும்பும் நக்சலைட்டுகளுக்கு அரசு நிதி உள்ளிட்ட உதவிகளையும் செய்து கொடுக்கிறது. அந்த வகையில் இன்று பஸ்தாரில் நக்சலைட்டுகள் 51 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரண் அடைந்தனர். இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு, ரூ.1.61 கோடி சன்மானம் அறிவிக்கப் பட்டு இருந்தது.

அதேபோல், ஒடிசாவில் நக்சலைட்டுகள் 15 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு போலீசாரிடம் சரண் அடைந்துள்ளனர். சரணடைந்த நக்சலைட்களிடம் இருந்து இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை போலீசார் கைப்பற்றினர்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.