Wednesday, April 1, 2026

இலங்கையில் வேகமாக வந்த இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டன; போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக ஓட்டுநர் கைது!

0 comments

களுத்துறை – வெட்டுமகட சந்தி பகுதியில் வெள்ளிக்கிழமை (06-02-2026) போட்டிப்போட்டு வேகமாக பயணித்த இரண்டு பஸ்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பஸ் சாரதிகளில் ஒருவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக் குட்படுத்தப்பட்டதில் அவர் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்திய பஸ் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் காலியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.

கைதுசெய்யப்பட்ட பஸ் சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00