‘சந்திரயான்-4’ திட்டத்திற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன.

‘சந்திரயான் – 4’ திட்டத்துக்கு இன்னும் இரு ஆண்டுகள் உள்ள நிலையில், நிலவின் தென் துருவப் பகுதியில் விண்கலம் தரையிறங்குவதற்கான இடத்தை, ‘இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அடையாளம் கண்டுள்ளது.

‘சந்திரயான் – 3’ திட்ட வெற்றியைத் தொடர்ந்து, நிலவின் தென் துருவப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள, ‘இஸ்ரோ’ முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு, ‘சந்திரயான் – 4’ என பெயரிடப்பட்டது. ஆனால் இது, ‘சந்திரயான் – 3’ போலல்லாமல், நிலவின் மண்ணை சேகரித்து மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் திட்டம்.

‘சந்திரயான் – 4’ திட்டத்தில், உந்துவிசை தொகுதி, தரையிறங்கும் தொகுதி, மேலே றும் தொகுதி, மாற்றும் தொகுதி, மீண்டும் நுழைவு தொகுதி – -இது மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பும் ஆகியவை இடம் பெற உள்ளன. 2028ல், ‘சந்திரயான் – 4’ திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ள நிலையில், மத்திய அரசும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில், ‘சந்திரயான் – 4’ திட்டத்தில், நிலவின் தென் துருவப் பகுதியில் விண்கலம் தரையிறங்குவதற்கான இடத்தை இஸ்ரோ அடையாளம் கண்டுள்ளது.

நில வின் தென் துருவத்தில் உள்ள எம்.எம்., எனப்படும், ‘மான்ஸ் மவுட்டன்’ என்ற பகுதியில் இந்த விண்கலம் தரையிறங்க உள்ளது. இ தற்காக நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், எம்.எம்., 4 என்ற இடத்தை இஸ்ரோ உறுதி செய்துள்ளது.

Related posts

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாதது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஏர் இந்தியா 6 சர்வதேச விமான சேவைகளை ரத்து செய்துள்ளது

கேரளாவின் புதிய முதலமைச்சரின் பெயர் நாளை அறிவிக்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு.